ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 ஜூன் 2019 (14:25 IST)

இந்தியா மனது வைத்தால் நாங்கள் இந்தியாவையே வெல்வோம் – சோயிப் அக்தரின் ஆசை !

இந்தியா மனது வைத்தால்தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரமுடியும் என்றும் அப்படி வந்தால் இந்தியாவையே நாங்கள் வெல்வோம் எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. நான்காவதாக அணியாக செல்ல இங்கிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடுமையானப் போட்டி நிலவுகிறது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. ஒருப் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளோடு நடக்கும் இரண்டு போட்டிகளையும் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். இந்த இரு அணிகளையும் பாகிஸ்தான் வெல்வது மட்டுமில்லாமல் இங்கிலாந்து அடுத்து இந்தியா மற்றும் நியுசிலாந்துக்கு எதிரானப் போட்டிகளிலலும் தோற்க வேண்டும். இதில் ஞாயிற்ற்க்கிழமை நடக்கும் போட்டியில் இங்கிலாந்து இந்தியாவிடம் தோற்றால் பாகிஸ்தானின் வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதனால் நாளையப் போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ‘இந்தியா மனது வைத்தால்தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல முடியும். அப்படி பாகிஸ்தான் அரையிறுதிக்கு சென்றால் இந்தியாவை எதிர்கொண்டு வீழ்த்தும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.