திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (16:10 IST)

இரண்டு டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப்: இந்தியாவில் அறிமுகம்

பிரபல லேப்டாப் நிறுவனமான ஹெச்.பி. நிறுவனம், இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஹெச்.பி. நிறுவனம் தனது புதிய 'ஓமன் எக்ஸ் 2 எஸ்' டூயல் ஸ்கிரீன் கொண்ட லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இண்டெல் நிறுவனத்தின் ட்வின் ரிவர் பிளாட்ஃபார்மை சார்ந்து இயங்கும் முதல் லேப்டாப் ஆகும்.

புதிய 'ஓமன் எக்ஸ் 2 எஸ்' மாடலுடன் ஹெச்.பி. நிறுவனம் ஓமன் 15 மற்றும் பெவிலியன் கேமிங் 15 லேப்டாப்களையும் அறிமுகம் செய்துள்ளது.

ஹெச்.பி. ஓமன் 2 எஸ் லேப்டாப் மெல்லிய வடிவமைப்பில் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 15.6 இன்ச் மற்றும் ஃபுல் ஹெச்.டி.”, ”4 கே” பேனல்களை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

இதன் இரண்டாவது டிஸ்ப்ளே கீபோர்டின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 6 இன்ச் அளவில் 1080 பிக்சல் கொண்டிருக்கும் இந்த டிஸ்பிளே, ட்விட்ச், ஸ்பாடிஃபை மற்றும் டிஸ்கார்டு போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த கேமிங் லேப்டாப் 9 ஆம் தலைமுறை இண்டெல் கோர் ‘ஐ 9” பிராசஸர் கொண்டு இயங்குகிறது. இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் ‘RTX 2070’ அல்லது ‘RTX  2080’ மற்றும் 8 ஜி.பி. வரை ’GTTR 6’ மெமரியை தேர்வு செய்யும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது.

இந்த லேப்டாப்பில் இண்டெல் வைஃபை 6 வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு பல அம்சங்களை கொண்ட ’ஓமன் எக்ஸ் 2 எஸ்’ லேப்டாப்பின் விலை ரூ. 2,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை ஜூலை 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது.