மான்செஸ்டரில் இன்று மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேனின் டுவீட்

Last Modified புதன், 10 ஜூலை 2019 (09:54 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் அணிகளுக்கு இடையிலான நேற்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ரத்தானதை தொடர்ந்து இன்று போட்டி விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கவுள்ளது.

இன்றைய போட்டியிலும் மழை பெய்தால் நியூசிலாந்து அணிக்குத்தான் மிகவும் பாதகமாக அமையும். நேற்றைய போட்டியில் ரன் விகிதமும் குறைவாக இருப்பதால் டக்வோர்த் லீவிஸ் முறையின்படி இந்திய அணிக்கு எளிதான டார்கெட் தான் கிடைக்கும். மீண்டும் மழை வந்து போட்டி ரத்தானாலும் இந்தியாவுக்கு சாதகமாகத்தான் இருக்கும். எனவே நியூசிலாந்து ரசிகர்கள் இன்று மழை வரக்கூடாது என்றே கடவுளை கும்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நியூசிலாந்து ரசிகர்களின் மனம் குளிரும் வகையில் தமிழ்நாடு வெதர்மேன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் இன்றைய மான்செஸ்டர் தட்பவெப்ப நிலையின்படி மழைக்கு வாய்ப்பே இல்லை என்றும், அதனால் இன்றைய அரையிறுதி மழையால் தடைபடாது என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த டுவீட்டால் நியூசிலாந்து அணியினர்களும் ரசிகர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :