உலகக்கோப்பை: மீண்டும் போட்டி ஆரம்பித்தால் இந்தியாவின் இலக்கு என்ன?
இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த மழை தற்போது மணி 4.45ஆகியும் நிற்கவில்லை.
எனவே மழை இனிமேல் ஒருவேளை நின்று, அதன்பின் போட்டி ஆரம்பித்தால் இந்தியாவின் இலக்கு என்னவாக இருக்கும் என்பதை டக்வொர்த் லீவிஸ் விதிமுறை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
20 ஓவர்கள் போட்டி என்றால் இந்தியாவின் இலக்கு 148
25 ஓவர்கள் போட்டி என்றால் இந்தியாவின் இலக்கு 172
30 ஓவர்கள் போட்டி என்றால் இந்தியாவின் இலக்கு 192
35 ஓவர்கள் போட்டி என்றால் இந்தியாவின் இலக்கு 209
40 ஓவர்கள் போட்டி என்றால் இந்தியாவின் இலக்கு 223
46 ஓவர்கள் போட்டி என்றால் இந்தியாவின் இலக்கு 237
ஒருவேளை மழை நீடித்து இன்று ஆட்டம் தடைபட்டால் நாளை, இன்றைய ஆட்டம் எந்த ஓவரில் முடிந்ததோ, அதே ஓவரில் இருந்து ஆரம்பமாகும். அதாவது நியூசிலாந்து இன்னிங்ஸ் 46.2வது ஓவரில் இருந்து ஆரம்பமாகும். நாளையும் மழை பெய்தால் இந்தியா அரையிறுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்