நூல் இழையில் வெற்றி வாய்ப்பு: பாகிஸ்தான் – வங்கதேசம் இன்று மோதல்

pakistan
Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (11:56 IST)
இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோத இருக்கின்றன. இந்த ஆட்டமானது லீக் சுற்றில் இரு அணிகளுக்குமே கடைசி ஆட்டம் என்பதை தாண்டி பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இருக்கும் ஒரே வாய்ப்பு இந்த ஆட்டம்தான்.

நாளை நடைபெற இருக்கும் இரண்டு ஆட்டங்களோடு லீக் ஆட்டங்கள் முடிந்து. அரையிறுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகிவிட்டன.

ஒருவேளை பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும் அரையிறுதிக்கு செல்ல நான்காவது இடத்தில் இருக்கும் நியூஸிலாந்தை விட அதிக புள்ளிகள் பெற வேண்டும். அதற்கு பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். எனவே இன்றைய ஆட்டமும் மிகுந்த பரபரப்போடு எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிகளில் மோதிக்கொண்டது இல்லை. ஒருவேளை அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்துவிடும்.


இதில் மேலும் படிக்கவும் :