இந்தியா – இலங்கை: இன்று இறுதி யுத்தம்

cricket
Last Modified சனி, 6 ஜூலை 2019 (09:41 IST)
லண்டனில் நடைபெற்று வரும் உலக கோப்பை லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. இன்றைய பிற்பகல் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணியும், மாலை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்க அணியும் மோத இருக்கின்றன.

 
ந்தியா – இலங்கை ஆட்டம் இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாஇதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 6 வெற்றி, ஒரு தோல்வி பெற்றிருக்கிறது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. தற்போது 13 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் இரண்டாம், இடத்தையும் அரையிறுதி வாய்ப்பையும் பெற்றுள்ளது.

அதேசமயம் இலங்கை ஆடிய 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளது. மழை காரணமாக 2 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் இருக்கும் இலங்கை, ஏற்கனவே தனது அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் அரையிறுதிக்கு செல்வது உறுதி. என்றாலும் கூட 2011 உலக கோப்பையில் இந்தியா – இலங்கை இடையே நடந்த இறுதி போட்டியையும், டோனியின் கடைசி சிக்ஸரையும் யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அதனால் இந்தியாவை வெல்வது இலங்கைக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதாலேயே இலங்கை இன்று மல்லுக்கு நிற்கும் என எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :