இந்தியாவின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம் –அப்ரிடி பாராட்டு !

Last Modified திங்கள், 17 ஜூன் 2019 (13:47 IST)
நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம் என பாகிஸ்தாப் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்குப் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்த வெற்றி குறித்து டிவிட்டரில் ‘கிரிக்கெட் விளையாடும் திறன் அதிகமாகியுள்ளது. தகுதியான வெற்றியைப் பெற்றுள்ள பிசிசிஐக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்கான புகழனைத்தும் ஐபிஎல்-க்கே சேரும். இளம் வீரர்களைக் கண்டறிவதோடு நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடவும் ஐபிஎல் கற்றுக்கொடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :