இங்கிலாந்தின் மரண அடி: ஆடி போன வங்காளதேசம்

england
Last Modified சனி, 8 ஜூன் 2019 (16:31 IST)
உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான இன்றைய ஆட்டம் வங்காளதேசத்துக்கும் இங்கிலாந்துக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

வங்காளதேச அணியில் வேக பந்துவீச்சாளர்கள் அதிகம் என்பதால் இங்கிலாந்தை முதலில் எளிதில் வீழ்த்திவிட்டு பிறகு பேட்டிங் செய்யலாம் என திட்டமிட்டது வங்காளதேசம். ஆனால் அவர்கள் திட்டத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி அடித்து நொறுக்கி வருகின்றனர் இங்கிலாந்து அணியினர். 20 ஓவர்களே முடிந்துள்ள நிலையில் 129 ரன்களை பெற்றுள்ளது இங்கிலாந்து.

ஆட்டம் தொடங்கியது முதலே அனல் பறக்க விளையாடிய ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ கூட்டணி ஆளுக்கொரு அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளனர். 19வது ஓவரில் 51 ரன்களுடன் பேர்ஸ்டோ விக்கெட் இழக்க, ஜேசன் ராய் 75 ரன்களை குவித்து சதத்தை நோக்கி முன்னேறி வருகிறார். இந்த ஆட்டம் நிச்சயமாக வங்காளதேசத்துக்கு தண்ணி காட்டும் ஆட்டமாக இருக்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :