உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்திய அணியை எச்சரித்த சச்சின்!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜூன்9ம் தேதி ஒரு சவாலான களத்தை எதிர்நோக்கி இருக்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என சச்சின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. கடந்த 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக 2019ம் உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை போன்று பத்து ஆண்டு போட்டியிடுகின்றன.
இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வருகிற ஜூன் 9ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோதவிருக்கும் இந்திய அணி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என சச்சின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது சமூகவலைதள பக்கத்தில், "ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித் ஆகியோர் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர், ரன் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அந்த அணியினரின் பந்துவீச்சும் சிறப்பாக உள்ள நிலையில் இரு அணிகளும் மோத உள்ள ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாடவேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.