வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (10:53 IST)

தோனியின் கிளவுஸ் சர்ச்சை: பிசிசிஐ வாதத்தை பொருட்படுத்தாத ஐசிசி!

தோனிக்கு ஆதரவாக பேசிய பிசிசிஐ மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜூவின் கருத்தை ஐசிசி ஏற்க மறுத்துள்ளது. 
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோனி கீப்பிங் செய்த போது அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் பாராமிலிட்டரி சிறப்பு படையின் ”பாலிதான்” என்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.  
 
இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அகற்றப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தது ஐசிசி. மேலும், ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள், ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத அல்லது தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் அறிவித்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் தோனிக்கு ஆதரவாக பிசிசிஐ மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜூ குரல் கொடுத்துள்ளனர். மேலும், அது வணிக ரீதியான மதரீதியான முத்திரை அல்ல என குறிப்பிட்டு அதற்கான அனுமதி வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்டது ஐசிசி.
 
எனவே, ஆஸ்திரேலியா போட்டிக்கு முன் இதுகுறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.