செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (23:34 IST)

இந்தியா வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா? தோனி, ஜாதவ் ஆமை வேக ஆட்டம்

கடைசி பத்து ஓவர்களில் அதிரடியாக விளையாடினால் வெற்றி என்ற வாய்ப்பு இருந்தும், கடைசி சில ஓவர்களில் தோனியும், கேதார் ஜாதவ்வும் ஆமை வேகத்தில் விளையாடியதால் இந்தியா வேண்டுமென்றே தோல்வி அடைந்ததா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி கொடுத்த 338 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்தாலும் விராத் கோஹ்லியும் ரோஹித் சர்மாவும் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின் வந்த ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடியாக விளையாடியதால் இந்தியாவின் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது. 
 
ஆனால் 45வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா அவுட் ஆனவுடன் இந்தியாவுக்கு 30 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. தோனி அதிரடியாக அடித்திருந்தால் வெற்றி அல்லது வெற்றியை நெருங்கியிருக்க முடியும். ஆனால் தோனி பெரும்பாலும் சிங்கிள் எடுக்கவே முயற்சி செய்தார். நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்சரையும் தோனி அடித்திருந்தாலும் ஐந்து விக்கெட்டுக்கள் கையில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியில் காட்டிய அதிரடியை தோனி இந்த போட்டியில் காட்டவில்லை என்றே தெரிந்தது.
 
மொத்தத்தில் இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது
 
ஸ்கோர் விபரம்: 
 
இங்கிலாந்து: 337/7  50 ஓவர்கள்
 
பெயர்ஸ்டோ: 111
ஸ்டோக்ஸ்: 79
ராய்: 66
ரூட்: 44
 
இந்தியா: 306/5
 
ரோஹித் சர்மா: 102
விராத் கோஹ்லி: 66
ஹர்திக் பாண்ட்யா: 45
தோனி: 42