உலக கோப்பை வடிவ பிரம்மாண்ட கேக் – ராமநாதபுரத்தில் கிரிக்கெட் கொண்டாட்டம்

cake
Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (13:52 IST)
நடந்துவரும் உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமென ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் வெற்றியை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் ராமநாதபுரம் பேக்கரி ஒன்றில் உலக கோப்பை வடிவில் பெரிய சைஸ் கேக் செய்து அசத்தியுள்ளார்கள்.

இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் வெங்கடசுப்பு “இந்த கேக் செய்ய 300 முட்டைகள், 60 கிலோ சர்க்கரை பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஊழியர்கள் இணைந்து 4 நாட்களில் இந்த கேக்கை உருவாக்கினார்கள். இந்திய அணியின் வெற்றியை எல்லாரும் போலவே நாங்களும் தீவிரமாக எதிர்பார்த்து வருகிறோம்.” என்று கூறியிருக்கிறார்.

இதுபோலவே தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இளைஞர்கள் இந்தியா வெற்றிபெற சிறப்பு பூஜைகள், வேண்டுதல்களெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால் எதிர்பார்ப்பு பயங்கரமாக இருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :