338 இலக்கை நோக்கி இந்தியா: ஏமாற்றிய கே.எல்.ராகுல்

Last Modified ஞாயிறு, 30 ஜூன் 2019 (19:57 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 38வது உலகக்கோப்பையின் லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. பெயர்ஸ்டோ 111 ரன்களும், ஸ்டோக்ஸ் 79 ரன்களும், ஜேஜே ராய் 66 ரன்களும், ரூட் 44 ரன்களும் அடித்தனர். முகமது ஷமி மட்டுமே அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில் 338 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா 3வது ஓவரில் 8 ரன்கள் ஸ்கோர் இருந்தபோதே கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்துவிட்டது. இதனையடுத்து நம்பிக்கை நட்சத்திரங்களான விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா தற்போது விளையாடி வருகின்றனர்.

இங்கிலாந்தின் வோக்ஸ் மிக அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். ரோஹித் மற்றும் விராத் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி வருவதால் இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடினால் இந்தியா இலக்கை நெருங்கும் வாய்ப்பு உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :