”லைட்டா பயமாதான் இருக்கு”:இன்று வங்கதேசத்துடன் மோதும் ஆஃப்கானிஸ்தான்.

Last Updated: திங்கள், 24 ஜூன் 2019 (12:23 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 31 ஆவது லீக் போட்டியில், வங்கதேசம்-ஆஃப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

இங்கிலாந்து நாட்டில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று 31 ஆவது லீக் போட்டியில், வங்கதேசம்-ஆஃப்கானிஸ்தான் அணிகள் சவுதம்டன் நகரில் மோதுகின்றன.

மோர்தாசா தலைமியிலான வங்கதேச அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளன. அதில் 2 போட்டிகள் மற்றுமே வங்கதேசம் வென்றுள்ள நிலையில், புள்ளிவிவர பட்டியில் 6 ஆவது இடத்தில் உள்ளது.

வங்கதேச அணி, இனி எஞ்சியிருக்கிற 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுகளில் நுழையமுடையும்.

ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த 6 போட்டிகளில், ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற நிலையில், புள்ளிவிவர பட்டியலில் கடைசி இடமான 10 ஆவது இடத்தில் உள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதுவது வங்கதேச அணிக்கு பெரிய சவாலாக இருக்காது என்று நினைத்தாலும், இந்தியாவுக்கு எதிரான முந்தைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை தனது ’அதிவிவேக’ பந்து வீச்சால் கொஞ்சம் திண்டாடவைத்தது.

இந்த விஷயம் வங்கதேச அணியின் கண் முன்னால் வந்துபோனால், பெரிய அச்சமில்லை என்றாலும் ஓரளவு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும்.

எனினும் இன்றைய போட்டி வங்கதேசத்திற்கு, அரையிறுதி சுற்று நுழைவுக்கான ஒரு முக்கியமான போட்டி என்பதால், வங்கதேசம் கொஞ்சம் கவனமாகவே தன்னுடைய காய்களை நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :