322 இலக்கை சேஸ் செய்து அசத்திய வங்கதேசம்: பரிதாபத்தில் மேற்கிந்திய தீவுகள்

Last Updated: திங்கள், 17 ஜூன் 2019 (22:51 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றைய 23வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கொடுத்த 322 என்ற இலக்கை வங்கதேசம் மிக எளிதாக 41.3
ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியுள்ளது

வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் அருமையான சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார். முன்னதாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 48 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி ஐந்து புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் வங்கதேச அணி, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஆகிய நான்கு அணிகளுடன் விளையாடியுள்ள நிலையில் இவற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அரை இறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஸ்கோர் விபரம்:

மேற்கிந்திய தீவுகள் அணி: 321/8
50 ஓவர்கள்

ஹோப்: 96
லீவீஸ்: 70
ஹெட்மயர்: 50
ஹோல்டர்: 33

வங்கதேச அணி:
322/3 41.3

ஷாகிப் அல் ஹசன்: 124
லிட்டன் தாஸ்: 94
தமிம் இக்பால்: 48
சவும்யா சர்கார்: 29

ஆட்டநாயகன்: ஷாகிப் அல் ஹசன்

நாளைய போட்டி: இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான்


இதில் மேலும் படிக்கவும் :