புதன், 6 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (20:13 IST)

மீண்டும் 300க்கும் மேல் ஒரு சேஸிங்! என்ன நடக்குது உலகக்கோப்பையில்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் பயிற்சி ஆட்டத்தின்போதே 300 ரன்கள் என்பது சர்வசாதாரணமாக அடிக்கப்பட்டது. எனவே ஒரிஜினல் போட்டியிலும் அணிகள் 300க்கும் மேல் அதிகம் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
 
அந்த வகையில் இந்த தொடரின் பல போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் 300க்கும் மேல் அடித்தது. குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணீக்கு எதிராக 352 ரன்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 336 ரன்களும் எடுத்தது. அதேபோல் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 311 ரன்களும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் 330 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 348 ரன்களும் வங்க தேசத்திற்கு எதிராக இங்கிலாந்து 386 ரன்களும் எடுத்தன
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியும் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. ஹோப் 96 ரன்களும், லீவீஸ் 70 ரன்களும், ஹெட்மயர் 50 ரன்களும், ஹோல்டர் 33 ரன்களும் எடுத்துள்ளனர். வங்கதேசத்தின் ரஹ்மான் மற்றும் முகமது சஃபுதீன் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்., 322 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் வங்கதேசம் சற்றுமுன் வரை 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு  ரன்கள் எடுத்துள்ளது