1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (20:19 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் விலகல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஒருசில அணிகளின் நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக விலகி வரும் துரதிஷ்டமான நிலை தொடர்ந்து வருகிறது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தவான், முன்னணி பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் கலக்கியவரும் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி பேட்ஸ்மேனுமாகிய ஆண்ட்ரே ரசல் திடீரென உலகக்கோப்பையில் இருந்து விலகியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளதாகவும் இனிவரும் எஞ்சியுள்ள போட்டிகளில் ரசல் பங்கேற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக  சுனில் அம்ப்ரிஸ் மேற்கிந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மழை காரணமாக கிடைத்த ஒரு புள்ளியையும் சேர்த்து அந்த அணி இதுவரை 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல் அணியில் இருந்து விலகியுள்ளது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது