வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (20:32 IST)

தென்னாப்பிரிக்காவின் ஆமைவேக ஆட்டம்: நியூசிலாந்துக்கு 242 இலக்கு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் போட்டி இன்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது
 
தென்னாப்பிரிக்கா அணி வழக்கம்போல் இந்த போட்டியிலும் ஆமைவேகத்தில் ஆடியதால் ஸ்கோர் உயரவே இல்லை. விக்கெட்டுக்களும் சரியான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தது. கடைசி நேரத்தில் டூசன் மற்றும் மில்லர் மட்டுமே ஓரளவுக்கு அடித்து ஆடினர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ரன்கள் அடித்தது. டூசன் 67 ரன்களும், ஆம்லா 55 ரன்களும், மில்லர் 36 ரன்களும், மார்க்கம் 38 ரன்களும் அடித்தனர்.
 
நியூசிலாந்து தரப்பில் ஃபெர்குசன் 3 விக்கெட்டுக்களையும், போல்ட், கிராந்தோம், சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் 242 என்ற எளிய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யவுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது