வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 11 நவம்பர் 2018 (14:03 IST)

கோலியால் இந்த சாதனையை தொடக்கூட முடியாது: சேவாக்

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி சச்சினின் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். இது குறித்து சேவாக் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 
 
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி சமீபத்தில் கூட ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். 
 
இது குறித்து சேவாக் கூறியது பின்வருமாறு, பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடிப்பார். ஆனால் 200 டெஸ்டில் விளையாடிய தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியாது என தெரிவித்துள்லார். 
 
விராட் பலசாதனைகளை முறியடிபார் என நாளும் பல முறை கூறியுள்ளேன். ஆனால், சச்சினின் 200 டெஸ்டை நெருங்க குறைந்தது விராட் கோலி இன்னும் 24 ஆண்டுகள் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.