1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (13:07 IST)

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள்...

இந்திய கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்கும் அதேசமயம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருப்பவர் விராட் கோலி. முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு பிறகு தோனி இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்தார். அதன் பின் கேப்டன் பொறுப்பிற்கு வந்துள்ள கோலி தன் தலைமையிலான  இந்திய அணியை சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த அணியாக சிறந்து விளங்க வழிநடத்தி வந்திருக்கிறார்.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் ஹிந்தி திரையுலகின்  முன்னனி நடிகையான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலக மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டு  மணமக்களை  வாழ்த்தினர்.
 
இந்நிலையில் இன்று கோலி தனது முப்பதாவது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவ்வளவு சிறிய வயதில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனைகளையும் நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
 
சில நாட்களுக்கு முன்புதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் கிரிகெட் உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விராட் கோலி என பாராட்டிருந்தார்.
 
கோலியின் சாதனைகளும்,இந்தியாவின் பெருமையும் உலக அரங்கில் மேலும் பெருக விராட் கோலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.