புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (18:08 IST)

இந்திய மகளிர் அணியை பாராட்டிய சேவாக்

நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார். 
வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கிய மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. 
 
இதன்மூலம் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இந்திய அணி சாதனை படைத்தது. அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இதுகுறித்து இந்திய அணிக்கும், ஹர்மன்பிரீத்கவுருக்கும் விரேந்தர் சேவாக் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதற்கு ஹர்மன்பிரீத், தீபாவளி பரிசு அளித்துள்ளதாக கூறியுள்ளார்.