செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:06 IST)

தோனியின் செல்போன் எண் என்னிடம் இல்லை… ரவி சாஸ்திரி சுவாரஸ்ய தகவல்!

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தரின் யுடியூப் சேனலில் பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தொடர்ந்து தனது பதவிகால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்தவகையில் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் யுடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘ நான் தோனியை போல ஒரு அமைதியான விவேகமான வீரரைப் பார்த்ததில்லை. உலகக்கோப்பையை வென்றாலும், முதல் சுற்றிலேயே தோற்றாலும் அவர் ஒரே மாதிரியாகதான் இருப்பார். அவரின் செல்போன் எண் கூட இதுவரை என்னிடம் இல்லை. அவர் செல்போன் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் நாள்கணக்கில் செல்போன் இல்லாமல் இருப்பார். அவரை நான் தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வழிகள் உங்களிடம் இருக்கும். ஆனால் தோனிக்கு மாற்றாக கோலி களத்தில் இறங்கிவிட்டால் ஒரு புலி மாதிரி ஆக்ரோஷமாக இருப்பார். அவருக்கு அங்கு போட்டி போட்டு வெற்றி பெறுவதுதான் முக்கியம்’ எனக் கூறியுள்ளார்.