1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ravi bisnoi talked about getting place in team india

இந்திய ஜெர்சியில் நான் ஜொலிக்க போகிறேன்… ரவி பிஷ்னாய் மகிழ்ச்சி!

ரவி பிஷ்னாய்
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரவி பிஷ்னாய் அது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணியில் இணைந்து சிறப்பாக பந்துவீசி வந்த அஸ்வின் மீண்டும் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய ரவி பிஷ்னாய் முதல் முதலாக அணிக்குள் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘இந்திய அணியின் ஜெர்சியில் நான் ஜொலிக்க உள்ளது பெருமை அளிக்கிறது. எனது வாய்ப்புக்காக காத்திருக்கவும், தயாராகவும் செய்தேன். இப்போது எனது கனவு நனவாகி உள்ளதாக உணர்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!