தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2022; டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- ஐபிஎல் 2022-; டெல்லி அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு
- எல்லா நல்ல காரியமும் அங்கதான் நடக்குது…. அனுஷ்கா சர்மா பகிர்ந்த வைரல் புகைப்படம்!
- கோயம்புத்தூர் to பெங்களூர்… ரயிலில் செம்ம ப்ரமோஷன் செய்த விக்ரம் படக்குழு!
- பொன்னியின் செல்வன் ஓடிடி பிசினஸ்: கோலிவுட் ஆச்சரியம்!
கோலியும் மகிழ்ச்சியாக இல்லை… ரசிகர்களும் மகிழ்ச்சியாக இல்லை… யுவ்ராஜ் சிங் கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்பொது மோசமான பார்மில் இருக்கிறார்.
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது மோசமான ஆட்டத்திறனில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்கவில்லை. தொடர்ந்து சதங்களாக்க குவித்து ரன் மெஷின் என அழைக்கப்பட்ட அவர் இப்போது மோசமான பார்மில் இருக்கிறார். சமீபத்தைய இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இந்நிலையில் கோலி கடைசியா சதம் அடித்து 100 போட்டிகளைக் கடந்துவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அவர் கடந்த 100 இன்னிங்ஸ்களில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோலி குறித்து தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் கோலியின் நெருங்கிய நண்பருமான யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இப்போது கோலியும் மகிழ்ச்சியாக இல்லை.,. ரசிகர்களும் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் எந்தவொரு விளையாட்டு வீரரையும் விட கோலி மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் சென்சுரிக்கு செஞ்சுரியாக அடித்தவர். ஆனால் எல்லா சிறந்த வீரர்களுக்கும் இதுபோல நடக்கும். விரைவில் அவர் சரிவில் இருந்து மீண்டு வருவார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்