வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (08:13 IST)

ஆசிய விளையாட்டு போட்டி: 81 பதக்கஙக்ளை குவித்து இந்தியா சாதனை..!

கடந்த சில நாட்களாக 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று 11-வது நாளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இன்னொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜெனா இதே பிரிவில் வெள்ளி வென்றார். 
 
மேலும் ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அனஸ் முகமது யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியதோடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் கொண்ட இந்திய  அணி  தங்கம் வென்றது.
 
இந்த அணியில் இருந்த ராஜேஷ் ரமேஷ் தமிழகத்தின் திருச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவர், திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில்  நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை பெற்ற நிலையில் மொத்தம் 81 பதக்கங்களை பெற்றுள்ளது.
 
Edited by Siva