சனி, 14 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (16:12 IST)

ரிஷப் பண்ட் டெல்லி அணியை விட்டு செல்ல மாட்டார்… கங்குலி நம்பிக்கை!

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து நடந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தார். இந்நிலையில் அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகத்தோடு அவருக்கு மோதல் எழுந்துள்ளதாகவும் அதனால் அவர் சி எஸ் கே அணிக்கு தாவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அது குறித்து பேசியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனார் சவுரவ் கங்குலி “டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தக்கவைக்கவுள்ளது. அதனால் அவர் வேறு எந்த அணிக்கும் செல்ல மாட்டார். ஆனால் பயிற்சியாளர் விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த் முடிவும் எடுக்கவில்லை. டெல்லி அணி நிர்வாகிகள் இந்திய பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.