வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (17:26 IST)

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி : திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு

World Cup T20
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இதில் இந்தியா விளையாடும் போட்டிகளை திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்திய அணி விளையாடும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை ஐநாக்ஸ் திரையரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 
நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் இதற்காக ஐசிசி மற்றும் ஐநாக்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பை டி20 தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva