வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (09:19 IST)

ஆஸ்திரேலிய மைதானங்கள் சூர்யகுமாருக்கு உதவும்- முன்னாள் வீரர் கணிப்பு!

இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறந்த பார்மில் உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார். சிறப்பான ஆட்டத்தால் தற்போது டி 20 தரவரிசையில் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் “சூர்யகுமார் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி கீப்பருக்கு பின்னால் அடிக்க முயற்சி செய்கிறார். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து கூடுதல் வேகமாக வரும். அதனால் அவருக்கு இது உதவும்.” எனக் கூறியுள்ளார்.