செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (09:05 IST)

இன்று முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் கொண்டாட்டம்! – எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்?

World Cup 2023
இன்று முதல் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது.



ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த முறை இந்த போட்டி இந்தியாவில் நடந்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 நாட்டு கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்கின்றன.

பிரபலமான வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளியே தள்ளி உலகக்கோப்பைக்குள் நுழைந்துள்ள நெதர்லாந்து அணியின் மீது பலருக்கும் ஆர்வம் இருந்து வருகிறது. உலகக்கோப்பை போட்டியின் அனைத்து போட்டிகளும் இந்தியா முழுவதும் 9 மைதானங்களில் நடைபெறுகிறது. ஒரு அணி 9 போட்டிகள் மூலம் எதிரே உள்ள 9 அணிகளோடும் மோதும் என கணக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பை போட்டியில் பகல் ஆட்டங்கள் காலை 10.30 மணிக்கும், இரவு நேர ஆட்டங்கள் மதியம் 2 மணிக்கும் நடைபெறும். மொத்த போட்டிகளில் 6 போட்டிகள் மட்டுமே பகல் நேர ஆட்டங்கள் ஆகும்.

இன்றைய முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூஸிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன.

இந்த உலகக்கோப்பை தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் காணலாம். ஓடிடி தளத்தில் பார்க்க டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் இலவசமாக கண்டு களிக்கலாம். ஆனால் இலவச ஒளிபரப்பு 480p குறைந்த தரத்திலேயே ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.