செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (07:20 IST)

“தவறாக புரிந்துகொள்ளப்படுகிறார்… ரசிகர்கள் அவரை குறைவாக மதிப்பிடுகிறார்கள்..” –கம்பீர் குறித்து அஸ்வின்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அவர் குறித்து இந்திய ரசிகர்களுக்கே ஒரு கோபமான மனநிலையையே நிலவுகிறது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நபர் கம்பீர் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசிய அஸ்வின் "இந்தியாவில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். அவர் மிகச்சிறந்த அணி வீரர். மக்கள் அவருக்கு தகுதியானதை விட மிகக் குறைவான மதிப்பை வழங்குகிறார்கள், அவர் எப்போதும் அணியைப் பற்றி சிந்திக்கும் தன்னலமற்ற தனிநபராக இருந்தார்" என்று பேசியுள்ளார்.