“இந்த அளவுக்கு நாங்க எதிர்பார்க்கல…” – இந்திய விருந்தோம்பல் குறித்து பாக் கேப்டன் பாபர் ஆசாம்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் இந்தியா வந்து கடந்த வாரத்தில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி முடித்துள்ளனர். இன்று இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
உலகக் கோப்பையில் கலந்துகொள்ளும் அணிகளில் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் வந்து இப்போது தங்கியிருக்கும் பாகிஸ்தான் அணியினர் சொந்த நாட்டில் இருப்பது போல உணர்வதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார். அதில் “"விருந்தோம்பல் மிகவும் அருமையாக இருந்தது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை, ஆனால் எங்கள் அணிக்கு மக்கள் பதிலளிக்கும் விதம், ரசிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் சொந்த நாட்டில் இருப்பதை போல உணர்கிறோம்" என்று கூறியுள்ளார்.