திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (13:37 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வருகை.. களைகட்டும் உலகக்கோப்பை கிரிக்கெட்..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில் வரும் எட்டாம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையான போட்டியில் விளையாட இரு அணிகளும் சென்னை வந்துள்ளன. 
 
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் நாளை முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. 
 
நாளை அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. 
 
இதற்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran