செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 மே 2023 (15:54 IST)

பப்ஜிக்கு அனுமதி.. ஆனா ஒரு நாளைக்கு 3 மணி நேரம்தான்! – அதிர்ச்சியில் கேமர்கள்!

PUBG game
இந்தியாவில் பப்ஜி (PUBG) ஆன்லைன் கேம் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்த மணி நேரமே விளையாடும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்கள், சிறுவர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக புகழ்பெற்ற கேமாக இருந்து வருவது PUBG எனப்படும் Battlegrounds விளையாட்டு. இந்தியாவில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையான நிலையில் இந்த கேமை இந்திய அரசு தடை செய்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த விளையாட்டிற்கு இந்தியாவிற்குள் சோதனை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் இந்த கேம் Battlegrounds mobile india என்ற பெயரில் வெளியாகியுள்ள நிலையில் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்டோர் இதை டவுன்லோட் செய்துள்ளனர்.

ஆனால் ஒருநாளை இவ்வளவு நேரம்தான் பப்ஜி விளையாட முடியும் என நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு குறைவானவர்கள் ஒரு நாளைக்கு 3 மணி நேரமும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6 மணி நேரமும் விளையாட அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து பப்ஜி திரும்ப வந்திருந்தாலும் விளையாட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது கேமர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K