சென்னை - போடி ரயிலில் திடீரென கழன்ற சக்கரம்.. அதிர்ச்சியில் பயணிகள்..!
சென்னை - போடி ரயிலில் திடீரென எஞ்சின் பெட்டியின் அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் ரயில் நேற்றிரவு 10.30 மணிக்கு புறப்பட்டது. இன்று காலை 7.50 மணியளவில் மதுரை அருகே சென்றபோது, எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று விட்டது.
உடனடியாக ரயில் எஞ்சின் டிரைவர்கள் இதனை உணர்ந்ததை தொடர்ந்து, ரயில் நிறுத்தப்பட்டது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் இந்த ரயில் நிற்பதால், சென்னையில் இருந்து வரும் மற்ற சிறப்பு ரயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களை மாற்று தடத்தில் செலுத்த ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கழன்ற சக்கரத்தை மீண்டும் பொருத்தும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Edited by Siva