திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2024 (08:32 IST)

சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு: இமெயில் வந்ததால் பரபரப்பு..!

bomb threat
சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில் இலங்கை, மும்பை, பெங்களூரு, சிலிகுரி, டெல்லி, கொல்கத்தா, கோவா, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 11 நகரங்களில் இருந்து வரும் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்களுடன் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு விமானமும் தரையிறங்கியதும், பயணிகள் வெளியேறிய பிறகு விமானம் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது. 
 
இதுவரை எந்த விமானத்திலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வழக்கம்போல இந்த மின்னஞ்சல் புரளியாகவே இருக்கலாம் என அதிகாரிகள் உறுதியாக கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பும் சென்னை விமான நிலையத்திற்கு இதேபோன்ற வெடிகுண்டு மின்னஞ்சல் வந்தது, அது புரளி என்பது உறுதிசெய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva