இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 2ஆம் நாள் முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 118/2

c
Last Updated: சனி, 16 ஜூன் 2018 (13:19 IST)
செய்ண்ட் லூசியாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 118/2 ரன்கள் குவித்துள்ளது.
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
 
இதைத்தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செய்ண்ட் லூசியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் களமிறங்கிய கேப்டன் தினேஷ் சண்டிமாலின் சதத்தால் அந்த அணி 253 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகப்பட்சமாக தினேஷ் சண்டிமால் 119 ரன்கள் எடுத்தார்.
v
 
இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாட களமிறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2 வீக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. டெவன் ஸ்மித் 53 ரன்களுடனும், ஷாய் ஹோப் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :