1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (23:01 IST)

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இலங்கை திணறல்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டவுரிச் 125 ரன்கள் குவித்தார்.
 
இந்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆரம்பம் முதல் திணறி வருகிறது. அந்த அணி ஆட்டநேரம் முடிவின்போது 3 விக்கெட்டுக்களை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மெண்டிஸ், பெரரே மற்றும் மாத்யூஸ் ஆகிய மூன்று விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களுக்கு விழுந்தது. இன்னும் 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 383 ரன்கள் இலங்கை அணி பின் தங்கியுள்ளது. 
 
இன்று 8வது ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஃபாலோ ஆனை இலங்கை அணி தவிர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது கேப்டன் சண்டிமால் 31 பந்துகளுக்கு 3 ரன்களும், சில்வா ஒரு ரன்னும் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.