உமேஷ் யாதவ் வேகத்திற்கு அடிபணிந்தது வெஸ்ட் இண்டீஸ் -311 ரன்னுக்கு ஆல்அவுட்

Last Modified சனி, 13 அக்டோபர் 2018 (10:41 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் ச்சேஸின் அபார சதத்தால் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் குவித்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

வெஸ்ட் இண்டீஸின் ஆறாவது வீரராகக் களமிரங்கிய ரோஸ்டன் ச்சேஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 106 ரன்கள் சேர்த்து உமேஷ் யாதவ் பந்தில் போல்டு ஆனார். அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் 52 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் 311 ரன்னாக உயர்ந்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்களும் அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் இந்தியா மூன்று ஓவர்கள் முடிவில் 24 ரன்கள் சேர்த்து விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது. ராகுல் 3 ரன்களுடனும் பிருத்வி ஷா 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :