எந்த கலரில் வேண்டுமானாலும் அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம்… ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்திய விம்பிள்டன்!
விம்பிள்டன் போட்டிகளில் பெண் வீராங்கனைகள் வெள்ளை நிறத்தில் மட்டுமே அண்டர் ஷார்ட்ஸ் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நிலவி வருகிறது.
உலகின் பழமையான டென்னிஸ் தொடர்களில் ஒன்று விம்பிள்டன் தொடர். 19 ஆம் நூற்றாண்டில் இருந்து விம்பிள்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் விளையாடும் வீராங்கனைகள், வெள்ளை நிறத்தில் மட்டுமே அண்டர் ஷார்ட்ஸ் உடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு இத்தனை ஆண்டுகாலமாக இருந்தது. ஆனால் மற்ற தொடர்களில் இந்த ஆடைக் கட்டுப்பாடு இல்லை.
இந்நிலையில் பெண் வீராங்கனைகள் மாதவிடாய் நாட்களில் தங்களால் சரியாக விளையாட முடியவில்லை என்று அந்த கட்டுப்பாட்டை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து இப்போது விம்பிள்டன் நிர்வாகம், எந்தவிதமான நிறத்தில் வேண்டுமானாலும், உள்ளாடை அணியலாம் என அறிவித்துள்ளது.