செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (16:37 IST)

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜொலிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

ஆனால் இந்திய அணியின் மற்றொரு பவுலரான முகமது சிராஜ் இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை இந்த தொடரில் அளித்துள்ளார். அது சிராஜ் இந்த தொடரில் சுமார் 160க்கும் மேற்பட்ட ஓவர்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இது மற்ற பவுலர்களை விட அதிகம். அதே போல கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரிலும் அவர் 155 ஓவர்கள் வீசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து காயம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் பந்துவீசி அசத்தி வருகிறார். இதன் மூலம் இந்திய அணியின் பவுலிங் மெஷினாக உருவாகியுள்ளார்.

இந்நிலையில் சிராஜ் பற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் “சிராஜ் உண்மையிலேயே ஒரு போர் வீரர் போன்றவர். அவர் போன்ற வீரர் நம் அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர். அவர் அணிக்காக ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்து விளையாடுகிறார். சில சமயங்களில் அவர் வேண்டுமென்றே போலியான கோபத்தைக் காட்டுவார். ஆனால் அது உண்மையில்லை என்று நமக்குத் தெரியும். அவர் மிகவும் நல்ல மனிதர். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.