தொடர்புடைய செய்திகள்
- சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!
- வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!
- இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் "இன்ஃபிளுன்செர்"
- காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!
- டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!
ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களும் எடுத்தது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்ததால், வெற்றி பெற அவர்களுக்கு 374 ரன்கள் தேவைப்பட்டது. நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு ஐந்தாம் நாளில் 35 ரன்களே தேவை என்பதாலும் கைவசம் 4 விக்கெட்டுகள் இருப்பதாலும் அதன் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.
ஆனால் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி வந்தனர். இந்நிலையில் வெற்றிக்கு இன்னும் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி தங்கள் கடைசி விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய சிராஜ் ஐந்து விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர்.
அடுத்த கட்டுரையில்