வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:02 IST)

வார்னருக்கு வாழ்நாள் தடை நீக்கம்! புஷ்பா back on fire! - மீண்டும் கேப்டன் ஆவாரா?

Warner

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற வீரராக உள்ளவர் டேவிட் வார்னர். ஐபிஎல் அணிகளிலும் தொடர்ந்து பல சீசன்களாக விளையாடி வரும் டேவிட் வார்னருக்கு இந்தியாவிலுமே அதிகமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் நடந்த கிரிக்கெட் போட்டின் ஒன்றில் பந்தை சேதப்படுத்தியதாக ஓராண்டு விளையாட வார்னருக்கு தடை விதிக்கபட்டது,

 

மேலும் கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. அதன்பின்னர் சில ஆண்டுகளிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வார்னர் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் வார்னர் வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.

 

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வார்னர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K