1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:56 IST)

கையில் துப்பாக்கி.. வாயில் லாலிபாப்! வார்னரின் மாஸ் எண்ட்ரி! - புஷ்பா 2 ஷூட்டிங் சீனா?

Warner Pushpa 2

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கேங்ஸ்டர் உடையில் உள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அது புஷ்பா 2 படத்தில் அவர் நடிக்கும் காட்சி என தகவல்கள் பரவி வருகிறது.

 

 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டை தாண்டி அவர் இந்திய சினிமா பாடல்களுக்கு குடும்பத்தோடு ஆடும் டான்ஸ்க்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா படத்தின் பாடல்களுக்கு அவர் செய்த வீடியோக்கள் பெரும் ட்ரெண்ட் ஆனது.

 

அதுமுதல் அவரை ரசிகர்கள் ‘புஷ்பா’ வார்னர் என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். வரவிருக்கும் புஷ்பா 2 படத்தில் வார்னர் கேமியோ ரோலில் வர உள்ளதாக பல காலமாகவே ரசிகர்கள் இடையே ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில்தான் தற்போது டேவிட் வார்னர் கேங்ஸ்டர் போல டாட்டூ குத்தி, கையில் ஒரு தங்க துப்பாக்கியுடன் வருவது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

 

இது சமீபத்தில் ராஜமௌலியுடன் வார்னர் நடித்த விளம்பரம் படம் போன்ற வேறு ஒரு விளம்பர படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் சிலர் இது புஷ்பா 2 படத்தில் வார்னரின் கேமியோ ரோல் தோற்றம் என்றும் சொல்லி வருகின்றனர். 

 

Edit by Prasanth.K