புதன், 9 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (23:17 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடக்குமா?

cricket
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி  இந்த முறை பொதுவான இடத்தில் நடக்கலாம் என தகவல் வெளியாகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக கடந்த 1984 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய  நாடுகளைக் கொண்ட ஆசிய கிரிக்கெட் போட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம்.

இதுவரை 15 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பை வென்றுள்ளன.

இந்த ஆண்டு போட்டியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட முடியாததால்,  இப்போட்டி பொதுவாக ஒரு இடத்திற்கு மாற்றப்படலம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா கூறியிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இம்முறை கத்தாரில் நடக்கலாம் எனன எதிர்பார்க்கப்படுகிறது.