1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (23:01 IST)

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

pakistan
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

நேற்று, இங்குள்ள பெஷாவர் நகரில்  உள்ள மசூதியில்,பிற்பகல் தொழுகையில் 400 க்கும் அதிகமானோர் இருந்தனர்.

அப்போது,  பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், 46 பேர் பலியாகினர்,. 150 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், இன்றைய நிலவரப்படி 100 பேர் பலியாகியுள்ளனர்.

100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், ஆப்கானில்  உமர் காலித் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதற்காக தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு  இத்தாக்குதலை நடத்தியது  குறிப்பிடத்தக்கது.