திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 14 ஜனவரி 2023 (15:44 IST)

3 ஆவது போட்டியில் சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

கடந்த ஒரு வருடமாக சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சகட்ட ஆட்டத்திறனில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் டி 20 போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.இப்போது டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். டிவில்லியர்ஸுக்கு பின்னர் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் டி 20 அணியில் நிரந்தரமாக இடம்பிடித்து விட்ட சூர்யகுமார் யாதவ், இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடத்துக்காக போராடி வருகிறார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் இலங்கை அணிக்கு ஒருநாள் அணிக்கு எதிரான போட்டிகளில் இதுவரை வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

இப்போது தொடரை இந்திய அணி வென்று விட்டதால் மூன்றாவது போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப் படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.