செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:48 IST)

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: சானியா மிர்சா- போபண்ணா ஜோடி தோல்வி

sania
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா மற்றும் இந்திய வீரர் போபண்ணா ஜோடி கலப்பு இரட்டை போட்டியில் சிறப்பாக விளையாடினர் என்பது தெரிந்ததே.
 
இந்த ஜோடி காலிறுதி போட்டியில்வெற்றி பெற்றதை அடுத்து அரையருதியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா மிர்சா - போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. 
 
சானியா மிர்சா இந்த தொடருடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து ஓய்வுக்கு முன் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத வகையில் சானியா மிர்சா தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva