தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!
- செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!
- பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?
- புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கம்.! ஹேமா கமிட்டி குறித்து வைரமுத்து கருத்து.!!
சென்னை டெஸ்டடில் மூன்று ஸ்பின்னர்களோடு களம் காண்கிறதா இந்திய அணி?
இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறது. இதையடுத்து வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே சென்னை வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஆடப்போகும் லெவன் அணி என்னவாக இருக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
சென்னை மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று சுழலர்களுமே இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த கட்டுரையில்