1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: புதன், 5 அக்டோபர் 2022 (09:10 IST)

“பூம்ராவுக்கு பதில் உலகக்கோப்பையில் யார்…” கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

இந்திய அணி வெற்றிகரமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா “பூம்ராவுக்கு பதில் ஆஸ்திரேலியாவில் விளையாடப் போவது யார் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆஸ்திரேலியா சென்ற பிறகுதான் அது முடிவாகும்” எனக் கூறியுள்ளார். பூம்ரவுக்கு பதில சிராஜ் அல்லது ஷமி விளையாடக் கூடும் என தெரிகிறது.