செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:39 IST)

இன்று பஞ்சாபுடன் மோதும் சிஎஸ்கே: முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

இன்று பஞ்சாபுடன் மோதும் சிஎஸ்கே: முதல் வெற்றியை பதிவு செய்யுமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இதுவரை 7 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்றைய 8வது போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே டெல்லி அணியுடன் மோதிய சென்னை அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்காமல் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் வென்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சென்னையை பொருத்தவரை ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவர்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் ராபின் உத்தப்பா என்று களமிறக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது பந்துவீச்சை பொறுத்தவரை நிகிடியை களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருப்பதால் நிகிடி களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் ஆல்ரவுண்டர்களான சாம் கர்ரன், ஜடேஜா ஆகியோர் அணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
பஞ்சாப் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற நிலையில் இன்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்த கண்டிப்பாக தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது